உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் சாலை ஓரம் குப்பை குவியலால் துர்நாற்றம்

ராமேஸ்வரத்தில் சாலை ஓரம் குப்பை குவியலால் துர்நாற்றம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் துறைமுகம் வீதி ரோட்டோரத்தில் குப்பை குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.ராமேஸ்வரம் நகராட்சி துறைமுக வீதியில் இந்தியகடற்படை முகாம், மீன்துறை அலுவலகம், ஓட்டல், லேத், பட்டறைகள்உள்ளது. இங்குள்ள சிமென்ட் ரோட்டோரத்தில் வாறுகால் உள்ளது. ஆனால் வாறுகாலில் மழைநீர் செல்லமுடியாதஅளவுக்கு பாலிதீன் பைகள், ஓட்டல், டீக்கடை, லேத்களில் வெளியேறும் கழிவுகளை கொட்டி விடுகின்றனர். மேலும் சாலைஓரத்தில்குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.இதனை அகற்றி சுகாதாரம் பராமரிக்க மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.மேலும் குப்பையை நகராட்சி வாகனங்களில் கொட்டாமல் ரோட்டோரத்திலும் வாறுகாலிலும் கொட்டுபவர்கள் மீது நகராட்சி நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே இப்பகுதியில் குப்பையை அகற்றி சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ