| ADDED : ஜூலை 25, 2024 04:06 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லுாரிச் சந்தை கண்காட்சி துவக்க விழா நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து சந்தை கண்காட்சியை திறந்து வைத்தார். கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் கண்காட்சி 4 கல்லுாரிகளில் கல்லுாரி சந்தை என்ற பெயரில் நடைபெற உள்ளது. முதலில் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கப்பட்டுள்ளது. 30 மகளிர் குழுக்கள் ஒருங்கிணைந்து 25 அரங்குகள் அமைத்து பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. மாணவிகள் பொருட்களை வாங்கி, மற்றவர்களுக்கும் இதன் சிறப்புத் தன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செயலர் பாரூக் அப்துல்லா, முதல்வர் பாலகிருஷ்ணன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் அரவிந்தன், மேலாளர் தங்கபாண்டியன், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.