உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரியமானில் மீனவ பெண்களுக்கு செவுள்  வலை பயிற்சி துவக்கம் 

அரியமானில் மீனவ பெண்களுக்கு செவுள்  வலை பயிற்சி துவக்கம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீன் வளக்காப்பகம் மற்றும் தொழில் சார் பயிற்சி இயக்குநரகம் சார்பில் மீனவப் பெண்களுக்கு செவுள் வலை வடிவமைத்தில், சீர் செய்தல் பயிற்சி 10 நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா அரியமான் கடற்கரையில் உள்ள வளாகத்தில் நடந்தது.இயக்குநர் நீதிசெல்வன் தலைமை வகித்து பேசினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் கலையரசன் வரவேற்றார். மண்டபம் பகுதி மீனவப் பெண்கள் பங்கேற்றனர். மீன் வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி பேசினார்.அப்போது, செவுள் வலை வடிவமைத்தல், பின்னல், சீர் செய்தலால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், மீனவ பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக உதவி இயக்குநர் ஜவஹர்பாண்டி வாழ்த்தி பேசினார். பொறியாளர் சிவசுடலைமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ