உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்டு மாடுகளால் பயிர்கள் சேதம்நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

காட்டு மாடுகளால் பயிர்கள் சேதம்நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி கிராமத்தில்காட்டு மாடுகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்வழங்க வலியுறுத்தினர். கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் வரவணி மக்கள்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வரணி, எட்டியதிடல், கொட்டுப்புளி,சேத்திடல், கூட்டாம்புளி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நெல், மிளகாய், பருத்தி, பயறு வகைகள் சாகுபடி நடக்கிறது.இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் இரவு நேரத்தில்பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதலால் இழப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது செங்குடி, சேத்திடல்கிராமங்களுக்கு மட்டும் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளனர். அத்துடன் விடுபட்டுள்ள வரவணி கிராமத்தையும் சேர்த்துகாட்டுமாடுகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை