உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு

இலவச சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு

ராமநாதபுரம் : பள்ளி சீருடை தைக்கும்பணியை தனியாருக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளதால் 1 லட்சம் மகளிர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஐடாஹெலன் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரத்தில் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கப்போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ஐடாஹெலன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 99 மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்களில் ஒரு லட்சம் மகளிர் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை தைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பணியை தனியார் வசம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடக்கிறது.மகளிர் கூட்டுறவு தையல் தொழிலாளர்களை வைத்துதான் பள்ளி மாணவர்களுக்கு அளவு எடுத்துள்ளனர். அதற்குரிய பயணப்படி இதுவரை வழங்கவில்லை. இதை ரூ.4ல் இருந்து ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட்டு சீருடைகள் தைக்கும் பணியை தையல் கூட்டுறவு சங்கத்தினருக்கு வழங்க வேண்டும்.இதுதொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர், இயக்குனரை சந்திக்க உள்ளோம். அதிலும் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ