உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் அருகே அசுத்தம் செய்வது தடுக்கப்படுமா

கோயில் அருகே அசுத்தம் செய்வது தடுக்கப்படுமா

கீழக்கரை, : கீழக்கரை ஹிந்து பஜார் தட்டார் தெருவில் உள்ள உக்கிர வீரமாகாளியம்மன் கோயில் முன்புறம் உள்ள சந்துப் பகுதியில் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றுவதால் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். முன்னாள் கவுன்சிலர் கே.ஆர்.சுரேஷ் கூறியதாவது:ஹிந்து பஜாரில் இருபுறங்களிலும் ஏராளமான மளிகைக் கடை, காய்கறி கடை உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் திறந்தவெளியில் கோயிலுக்கு முன்புறம் உள்ள இடத்தை அசுத்தப்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ