உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் ஆட்டை

அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் ஆட்டை

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பார்த்திபனுார் அழகப்பன்சேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 54. இவர் கமுதி நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி நயினார்கோவில் பகுதியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.இருவரும் ஜூலை 30ல் காலை வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றனர். பணி முடிந்து மாலை 5:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் பீரோவில் இருந்த 47 சவரன் நகைகள், 50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை