உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சின்ன ஏர்வாடியில் கும்பாபிஷேகம்

சின்ன ஏர்வாடியில் கும்பாபிஷேகம்

கீழக்கரை : ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியில் உள்ள மாதா அம்பிகை, தட்சிண மாடசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்கள் மாதாம்பிகை, தட்சிண மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்