உள்ளூர் செய்திகள்

குருத்தோலை ஊர்வலம்

கமுதி, : கமுதி அந்தோணியார் தெரு, சவேரியார் தெருவில் உள்ள பரத உறவின்முறை சார்ந்த கிறிஸ்தவர்கள் சார்பில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம் நடந்தது.இதனை முன்னிட்டு கருவாட்டுப்பேட்டை பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகளில் புனித அந்தோணியார் ஆலயம் வரை சென்றனர். பின்பு அங்கு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனையில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ