உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறப்பு விழா காணாத ஆய்வக கட்டடம்

திறப்பு விழா காணாத ஆய்வக கட்டடம்

கமுதி: கமுதி அருகே பேரையூர் தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் ஆய்வகம் செயல்பட்டு வந்தது. இதனால் நோயாளிகள் பணியாளர்கள் அச்சப்பட்டனர். புதிய கட்டடம் கட்டுவதற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 3 மாதத்திற்கு முன்பு புதிய வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை இந்த கட்டடம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர்​ சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளின் நலன் கருதி புதிய ஆய்வக கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை