உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

திருவாடானை: கள்ளக்கடல் எச்சரிக்கையால் பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டதால் காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 10 முதல் 14 இரவு 11:30 மணி வரை கடலில் பேரலைகள் எழக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடல் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். மீனவர்கள் தங்களது படகுகளை சேதம் அடையாத வகையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மரைன் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர். இதனால் தொண்டி அருகே காரங்காட்டில் படகு போக்குவரத்து கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தப்பட்டது. கள்ளக்கடல் எச்சரிக்கை நேற்று முன்தினத்துடன் முடிந்ததால் காரங்காட்டில்வழக்கம் போல் படகு போக்குவரத்து துவங்கப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ