உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சட்டத்திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் 

சட்டத்திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த உண்ணாவிரதத்தில் ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம் தலைமை வகித்தார். செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு, பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ், கமுதி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்கண்ணா, செயலாளர் சிவராமகிருஷ்ணன், ராமேஸ்வரம் தலைவர் மயில்சாமி, செயலாளர் ஹரிஹரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் மத்திய அரசு மூன்று சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை