உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியம்மன் கோயில் பூமி பூஜை

மாரியம்மன் கோயில் பூமி பூஜை

பரமக்குடி : பரமக்குடி அருகே காமன்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் புதிதாக கட்ட பூமி பூஜை நடந்தது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்களால் 10 நாட்கள் பங்குனி விழா நடப்பது வழக்கம். இந்நிலையில் காமன்கோட்டை கிராம பொதுமக்கள் இணைந்து புதிய கற்கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டு பூமி பூஜை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.அப்போது கணபதி பூஜை நடந்து யாக பூஜைகள் பூர்ணாகுதி நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் ரூ. 1கோடியே 73 லட்சத்தில் கருங்கற்களால் ஆன மூலஸ்தானம் மற்றும் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை