மேலும் செய்திகள்
அரசு அலுவலர்கள் உண்ணாவிரதம்
4 hour(s) ago
பராமரிப்பின்றி அரசு கால்நடை மருத்துவமனை
4 hour(s) ago
செயற்கை இழை ஓடுதள பாதை
4 hour(s) ago
திருவாடானை கோயிலில் கட்டட புனரமைப்பு பணி
4 hour(s) ago
பரமக்குடி : --பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வாழவந்த முத்துமாரியம்மன் கோயில் 35 வது ஆண்டு பங்குனி திருவிழா நடந்தது.கோயிலில் மார்ச் 28 இரவு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏப்., 4 காலை 9:00 மணிக்கு பொங்கல் விழா நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆயிரம் கண் பானை, கரும்புத்தொட்டில் எடுத்தல் மற்றும் பட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து இரவு பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டார். ஏப்.5 காலை அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று காலை 10:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சக்தி கோஷம் முழங்க அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு முளைப்பாரி விழா நடத்தப்பட்டது. இன்று இரவு உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago