உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா ஜூலை 9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அன்று முதல் தினமும் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. இரவில் ஆண்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை நேற்று முன்தினம் பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரிகளை அரசாள வந்த அம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின் அரசூருணி குளக்கரை நீரில் முளைப்பாரிகளை கரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை