உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா: ஆக.6ல் தேரோட்டம்

நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா: ஆக.6ல் தேரோட்டம்

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வருகிறார்.இக்கோயிலில் சவுந்தர்ய நாயகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு ஆடிப்பூர விழா ஜூலை 29 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் அருள் பாலிக்கும் நிலையில் ஆக.6 காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.ஆக.8 காலை 7:00 மணிக்கு அம்மன் தபசு திருக்கோலம், மாலை சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆக.9 காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்