உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் தேசிய கைத்தறி தினம்

பரமக்குடியில் தேசிய கைத்தறி தினம்

நெசவை தொட்டு வணங்கினார் கலெக்டர்பரமக்குடி: -பரமக்குடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் 10 வது தேசிய கைத்தறி தின விழா கொண்டாட்டம் எமனேஸ்வரம் மற்றும் ஜீவாநகரில் நடந்தது.மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, திட்டக்குழு துணைத் தலைவர் ஜீவரத்தினம், பெடரேஷன் சங்க தலைவர் சேஷைய்யன், செயலாளர் கோதண்டராமன் முன்னிலை வகித்தனர். கைத்தறி உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.இதில் 3 சிறந்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு விருது, சிறந்த சங்க மேலாளர்களுக்கான விருது 5 பேருக்கும், பணியாளர் விருது 4 பேருக்கும் மற்றும் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள் வழங்கப்பட்டது. பார்த்திபனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு நெசவாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஜீவா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் நடந்த விழாவில் கலெக்டர் பங்கேற்றார். அங்கு இளைஞர்கள் ஆர்வமுடன் கைத்தறி நெசவு செய்வதை பார்த்து நவீன தொழில் நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கைத்தறி நெசவைத் தொட்டு பார்த்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வணங்கினார். சென்னை நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் வரதராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கு முத்ரா கடன், கைத்தறிவு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வரும் காலங்களில் நெசவாளர்களுக்கான அனைத்து திட்டங்களும் முறையாக சென்றடைய கைத்தறித்துறை அலுவலர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் கைத்தறி நெசவில் விருது பெற்ற நெசவாளர்கள் மேலும் சாதனை படைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். கைத்தறி அலுவலர் விமல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை