| ADDED : ஜூன் 25, 2024 11:11 PM
ராமநாதபுரம் : கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததில் 59 பேர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர்கள் முத்துக்கூரி, மகேஷ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜவேல், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், ராமநாதன், மாரிச்செல்வம், சக்திவேல், சிங்கராஜ், கோவிந்தராஜ், பழனி, முத்துச்சாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கள்ளசாராய சாவுகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.