உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடி தர்காவில் பெயரளவிற்கு நடக்கும் சிறப்பு மருத்துவ முகாம்; மருந்து, மாத்திரை இல்லாததால் ஏமாற்றம்

ஏர்வாடி தர்காவில் பெயரளவிற்கு நடக்கும் சிறப்பு மருத்துவ முகாம்; மருந்து, மாத்திரை இல்லாததால் ஏமாற்றம்

கீழக்கரை : ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது.இங்கு மே 9ல் சந்தனக்கூடு விழா துவங்கியது. கொடி இறக்கத்துடன் நேற்று நிறைவடைந்தது.இங்கு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சந்தனக்கூடு விழாவிற்கான சிறப்பு மருத்துவ முகாம் தர்கா வளாகத்தில் அமைக்கப்பட்டது. முகாம் அமைக்கப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள்ஏதுமின்றி வெறும் காட்சி பொருளாக உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவித்தனர். சிகிச்சைக்கு வந்தவர்கள் கூறியதாவது:ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு தமிழகம்மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான யாத்ரீகர்களும், பொதுமக்களும் வருகின்றனர்.சிறப்பு மருத்துவ முகாம் அமைந்துள்ள இடத்தில் நோயாளிகளுக்கு தேவையான எவ்வித மருத்துவ உபகரணங்களும் அத்தியாவசிய மருந்துகளும் ஏதுமின்றி பெயரளவில் இரண்டு செவிலியர்களுடன் செயல்படுகிறது. டாக்டர்களும் வருவதில்லை.காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, விஷக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை பெற கூட வழியில்லாமல் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய ஊராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் உள்ளது.சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அலுவலர்களும் வந்து ஆய்வு செய்யவில்லை. எனவே பெயரளவில் காட்சிப் பொருளாக உள்ள சிறப்பு மருத்துவ முகாமால் எந்த பயனும் இல்லை. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்