உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயல்படாத பள்ளிக்கல்வி இணையதளம் பெற்றோர் வருகை பதிவு செய்வதில் சிக்கல் 

செயல்படாத பள்ளிக்கல்வி இணையதளம் பெற்றோர் வருகை பதிவு செய்வதில் சிக்கல் 

ராமநாதபுரம்:தமிழகத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடத்தி பெற்றோர் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் மன உளைச்சலில் உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு குறித்து பெற்றோர் கூட்டம் ஆக.,2 ல் நடந்தது. இதில் வருகை தந்த பெற்றோர் குறித்த விபரங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 50 சதவீதம் தொடக்கப்பள்ளிகள் ஆக.10லும், மீதமுள்ள 50 சதவீதம் தொடக்கப்பள்ளிகளில் ஆக.17 லிலும், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஆக.24 லிலும், நடுநிலைப்பள்ளிகள் ஆக.31 லிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக.2 ல் நடந்த பெற்றோர் கூட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஆன்-லைன் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் உள்ள செயல்பாடுகள் அனைத்தையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுகிறது. அதற்கேற்ப பள்ளிக்கல்வித்துறை இணையதளங்கள் செயல்படுவதில்லை என பள்ளி நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை