உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊரக வளர்ச்சித் துறையினர்   போராட்டம்  அறிவிப்பு

ஊரக வளர்ச்சித் துறையினர்   போராட்டம்  அறிவிப்பு

ராமநாதபுரம்,:-தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நாளை வெளிநடப்பு போராட்டமும், ஆக.22, 23 ல் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடைபெற உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில், ஊராட்சி செயலர் உட்பட, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், விடுபட்ட உரிமைகளை வழங்குதல். நுாறு நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்தல், நுாறு நாள் வேலை திட்டத்திற்கு தனி கட்டமைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை வட்டார தலைநகரங்களில் வெளி நடப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஆக.22, 23 ல் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்