உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இனி 1-5ம் வகுப்புக்கும் கலைத்திறன் போட்டிகள்

இனி 1-5ம் வகுப்புக்கும் கலைத்திறன் போட்டிகள்

ராமநாதபுரம் : தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் கலைத்திறன் போட்டிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன், மாணவிகளுக்கு கலையரசி என்ற விருதுகளும், சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கலைத்திறன் போட்டிகள் விரிவுப்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.ஒன்று, இரண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடுத்த பிரிவாகவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.ஒன்று, இரண்டாம் வகுப்புக்கு ஒப்புவித்தல், மழலையர் பாடல், ஆத்திசூடி 3 நிமிடம், கதை கூறுதல் 5 நிமிடம், வண்ணம் தீட்டுதல் 60 நிமிடம், ஆங்கில ரைம்ஸ் போட்டி 3 நிமிடம், மாறுவேடப்போட்டி 3 நிமிடம் போட்டி நடக்கும். மூன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பேச்சுப்போட்டி 3 நிமிடம், திருக்குறள் ஒப்புவித்தல் 3 நிமிடம், மெல்லிசை- தனிப்பாடல் 5 நிமிடம், தேச பக்தி பாடல்கள் 5 நிமிடம், களி மண் பொம்மைகள் செய்தல் 60 நிமிடம், மாறுவேடப்போட்டி 3 நிமிடம், நாட்டுப்புற நடனம்(குழு) 5 நிமிடம், பரத நாட்டியம் (குழு) என போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை