உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை நடத்த எதிர்ப்பு

தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை நடத்த எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ராம்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மதுபானக்கடை நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ராம்நகர் குடியிருப்போர் சங்க தலைவர் ஜெயமுரளி தலைமையில் அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ராம்நகர் கிழக்கு கடற்கரை சாலை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அருகேயுள்ள கார் மெக்கானிக் தகர செட்டில் புதிதாக தனியார் மதுபானக்கடை பார் வசதியுடன் துவங்க பணிகள் நடக்கிறது.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மனமகிழ் மன்றம் கிளப் என்ற பெயரில் தகரசெட்டில் மதுபானக்கடை வந்தால் போதை ஆசாமிகளால் தொல்லை ஏற்படும் என மாணவிகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே கலெக்டர் தனியார் மதுபானக்கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை