பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.கல்லூரியில் 2024 -25ம் ஆண்டிற்கா இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை முதல் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 10ல் துவங்கி 13 வரை நடக்கிறது.ஜூன் 10ல் அனைத்து இளநிலை பி.எஸ்.சி., அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 11ல் பி.காம்., (சி.எஸ்.) மற்றும் பி.பி.ஏ., பாடப்பிரிவுகள், ஜூன் 12ல் பி.ஏ., வரலாறு மற்றும் பி.ஏ., பொருளியல் பாடப்பிரிவு, ஜூன் 13ல் பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடக்கிறது. இதே போல் 2ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ல் அனைத்து இளநிலை பி.எஸ்.சி., அறிவியல், பி.காம்., (சி.எஸ்.,) மற்றும் பி.பி.ஏ., பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 25ல் பி.ஏ., வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.கலந்தாய்வின் போது மாணவர்கள் ஆன்-லைன் விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு, ஜாதி சான்றிதழ் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டுவர வேண்டும் என முதல்வர் மேகலா தெரிவித்துள்ளார்.