உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருட வாகனத்தில் எழுந்தருளிய பரமக்குடி சுந்தரராஜ பெருமாள்; ஆடி பிரம்மோற்ஸவத்தில் கோலாகலம்

கருட வாகனத்தில் எழுந்தருளிய பரமக்குடி சுந்தரராஜ பெருமாள்; ஆடி பிரம்மோற்ஸவத்தில் கோலாகலம்

பரமக்குடி : பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். நேற்று மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் பெரிய திருவடியான கருட வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் அலங்காரமாகினார். இரவு 8:00 மணிக்கு சோடஷ தீப ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து வட்டக்குடையுடன் சீர்பாதம் தாங்கிகள் தோளில் சுமந்தபடி வர பெருமாள் கோலாகலமாக வீதி உலா வந்தார். அப்போது பெருமாளின் பரிவாரங்கள் முன் செல்ல மேள தாளங்களுடன் பாகவதர்கள் பிரபந்தங்கள், பஜனை பாடி சென்றனர்.இரவு கோயிலை அடைந்த பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கைவாரி சேவையில் அருள் பாலித்தார். இன்று அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் எழுந்தருளுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை