உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லட்சுமிபுரம் ஊருணியில் படித்துறை குடிநீருக்கு சிக்கல்: பா.ஜ., கண்டனம்

லட்சுமிபுரம் ஊருணியில் படித்துறை குடிநீருக்கு சிக்கல்: பா.ஜ., கண்டனம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரம் ஊருணி குடிநீருக்காக பயன்படும் நிலையில் படித்துறை அமைக்கும் பணியால் குடிநீர் மாசடைந்துவிடும் என பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ராமாதபுரம் பா.ஜ., முன்னாள் நகராட்சி கவுன்சிலர் நாகராஜன் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சி 10 வது வார்டில் தாயுமானசுவாமி கோயில் அருகே லட்சுமிபுரம் ஊருணி உள்ளது.இங்கு 2015ல் குடிநீர் தேவையை கருதி படித்துறை அகற்றப்பட்டு துார்வாரி, நான்கு புறத்திலும் கரை அமைத்து ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.நான்கு கிணறுகள் அமைக்கப்பட்டு மோட்டார் வழியாக பம்பிங் நடக்கிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் புதிதாக படித்துறை அமைக்க 50க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியுள்ளனர். குடிநீருக்கு பயன்படுத்தும் ஊருணிக்குள் குளிக்க, துவைக்க மக்களை அனுமதித்தால் சோப்பால் ரசாயனம் கலந்து நீர் மாசடைந்து விடும். மேலும் முறையாக நகராட்சி கூட்டத்தில் படித்துறை கட்டுவது குறித்த ஒப்பந்தபுள்ளிக்கு அனுமதி பெறாமல் பணி செய்கின்றனர். எனவே குடிநீர் ஆதாரமாக உள்ள லட்சுமிபுரம் ஊருணியில் படித்துறை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றார்.ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் கூறுகையில், லட்சுமிபுரம் ஊருணி படித்துறை நகராட்சி நிதியில் கட்டப்படவில்லை. எம்.எல்.ஏ.,நிதியில் கட்டப்படுவது குறித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைத்து அனுமதி பெறப்பட்டுள்ளது.ஊருணி குடிநீர் பாதுகாக்கப்படும். ஊருணியில் படித்துறைக்காக சில மரங்கள் அகற்றியுள்ளனர். 50 மரங்கள் அகற்றிய ஆதாரத்தை அளித்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை