உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவக்கல்லுாரி  மருத்துவமனையில் மழை நீரால் நோயாளிகள் அவதி

மருத்துவக்கல்லுாரி  மருத்துவமனையில் மழை நீரால் நோயாளிகள் அவதி

ராமநாதபுரம் -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கும் மழை நீரால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் புற நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, பல், கண், சிறப்பு பிரிவு, காது, மூக்கு, தொண்டை, மன நலப்பிரிவுகளில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மழை நேரங்களில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அம்மா உணவகத்திலிருந்து மகப்பேறு பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தேங்கியுள்ள மழை நீரை கடந்து செல்லும் நிலை உள்ளது.தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதிகளை செய்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை