உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொட்டியபட்டியில் காவிரி நீருக்காக தவம்

தொட்டியபட்டியில் காவிரி நீருக்காக தவம்

சிக்கல்: சிக்கல் ஊராட்சிதொட்டியபட்டி பகுதி பாண்டியன் ஊரணி அருகே அமைந்துள்ளது. இங்கு காவிரி கூட்டு குடிநீர் வராததால் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.கிராமங்களுக்கு செல்லும் பிரதான பைப் லைன் சிக்கல் நகருக்குள் செல்கிறது. தொட்டியபட்டியில் காவிரி குடிநீர் குழாய் செல்லும் வழியில் கசிவு நீரை சேகரித்து பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. இங்கு 2022-ல் அமைக்கப்பட்ட உள்ளூர் தேவைக்கான குடிநீர் குழாய் எவ்வித பயன்பாடில்லாமல் காட்சி பொருளாக உள்ளது.கழிவுநீர் செல்வதற்கான வசதி இல்லாத நிலையில் பெயரளவிற்கு அமைக்கப்பட்ட வாறுகால் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.தொட்டியபட்டி மக்கள் கூறியதாவது:கிராமங்கள் தோறும் பைப் லைனில் காவிரி நீர் குடிநீர் வினியோகம் செய்து வரும் நிலையில் இப்பகுதியில் தண்ணீர் சப்ளைக்கு பைப் லைன் வசதிகள் பொருத்தாமல் உள்ளனர். இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம்.அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டோரத்தில் காவிரி நீர் கசிந்து வருகிறது. அவற்றை சிறிய கப்புகளில் பிடித்து குடங்களில் சேகரிக்கிறோம். இந்த தண்ணீரை வேறு வழியின்றி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்