உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தினைக்குளத்தில் மக்கள் குறைதீர் முகாம்

தினைக்குளத்தில் மக்கள் குறைதீர் முகாம்

திருப்புல்லாணி : தினைக்குளம் மற்றும் வண்ணாங்குண்டு ஊராட்சியில் நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின் அவர் கூறியதாவது:பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு தேவையான உணவுப் பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்படும். ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டப் பணிகளை அவ்வப்போது நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தேவையான பணிகளை தேர்வு செய்து நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்.சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மகளிர் சுய உதவி குழு பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மகளிர் குழுக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நிலையான வருமானம் கிடைக்கும் என்றார். திருப்புல்லாணி பி.டி.ஓ.ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், வண்ணாங்குண்டு ஊராட்சித் தலைவர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ