உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினம் பள்ளி எஸ்.எம்.சி., கூட்டம்

பெரியபட்டினம் பள்ளி எஸ்.எம்.சி., கூட்டம்

பெரியபட்டினம் : பெரியபட்டினத்தில் உள்ள சேகு ஜலாலுதீன் அம்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்.எம்.சி.,) மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் கொன்ன முத்து வரவேற்றார்.சிறப்பு பார்வையாளராக சுமைதாங்கி பள்ளி தலைமை ஆசிரியர் முனீஸ்வரி பங்கேற்று பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பேசினார். மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. உதவி ஆசிரியர் உதுமான் மைதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ