உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் விடுதியில் குவிந்த பாலிதீன் கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

ராமேஸ்வரம் விடுதியில் குவிந்த பாலிதீன் கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் குவித்து வைத்துள்ள பாலிதீன் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்களால் துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு அனுமதி பெற்ற தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகள் போர்வையில் ஏராளமான விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தேங்கும் உணவு கழிவுகள்,பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பைத் தொட்டியில் சேகரித்து நகராட்சி வாகனத்தில் கொட்டுகின்றனர்.இந்த குப்பையை ஊருக்கு வெளியில் 4 கி. மீ.,ல் உள்ள திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் தரம் பிரித்து கழிவுகளை தீ வைத்து எரிகின்றனர். இந்நிலையில் அரசு விதிமுறை மீறி ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் விடுதியில் டன் கணக்கில் பாலிதீன் பை கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்களை குவித்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் மல்லிகை நகர், ராஜகோபால் நகர், அபூல்காபில் தர்கா தெரு செல்லும் மக்களுக்கும், விடுதியை சுற்றி வசிக்கும் மக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதே போல் விதி மீறி செயல்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து விடுதிகளில் தேங்கும் குப்பையை தினமும் சேகரிக்க நகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை