உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் அருகே கிராமங்களில் ரவுடிகள் அட்டகாசம்-வழிப்பறி தடுக்க தவறும் போலீசார்

ராமநாதபுரம் அருகே கிராமங்களில் ரவுடிகள் அட்டகாசம்-வழிப்பறி தடுக்க தவறும் போலீசார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒருசில கிராமங்களில் ரவுடிகள் அட்டகாசம், வழிப்பறி நடப்பதாகவும், தனியாக செல்வோர் அச்சப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ராமநாதபுரம் அருகே வழுதுார், உடைச்சியார்வலசை, பெருங்குளம் பகுதிகளில் தனியாக டூவீலர்களில் செல்வோர், பெண்களுக்கு ரவுடிகள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. டூவீலர்களில் செல்வோரை சில ரவுடிகள் கும்பல் வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.பலர் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து போலீசில் புகார் அளிக்க தயங்குகின்றனர். சில மாதங்களாக இந்த ரவுடி கும்பல் தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கேணிக்கரை, உச்சிபுளி போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் வாலாந்தரவை, வழுதுாரை மையமாகக் கொண்டு இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.மேலும் இப்பகுதியில் நிரந்தரமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் ரவுடிகளை கட்டுப்படுத்த எஸ்.பி., சந்தீஷ் சாட்டையை சுழற்ற வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை