உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்ட பளுதுாக்கும் போட்டி

ராமநாதபுரம் மாவட்ட பளுதுாக்கும் போட்டி

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் பளுதுாக்கும் போட்டிகள் பரமக்குடி ஆயிர வைசிய மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட பளுதுாக்கும் சங்க தலைவர் ரெங்காச்சாரி தலைமை வகித்தார். பாரதியார் உடற்பயிற்சி சாலை ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஆஞ்சநேய விலாஸ் பயிற்சி சாலை ஆசிரியர் சேஷய்யன் குத்து விளக்கு ஏற்றினார்.துணைத் தலைவர் ரவிவர்மா முன்னிலை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார்.போட்டிகள் 35 கிலோ முதல் 105 கிலோ உடல் எடை பிரிவில் நடத்தப்பட்டன. 38 ஆண், 26 பெண் வீரர்கள் பங்கேற்றனர்.இதன்படி பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள சாம்பியன் ஜிம், ஆயிர வைசிய இளைஞர் சங்கம், யோகாசனா, சுதந்திரா, பாரதியார், ஆயிர வைசிய சமூக நலச் சங்க உட்பட பல ஜிம்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.போட்டிகள் சினாட்ஸ் மற்றும் கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சாம்பியன்ஷிப் மற்றும் சிறந்த பளு துாக்கும் வீரர் பரிசுகளும் வழங்கப்பட்டன.அனைத்து பயிற்சி சாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ