உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகநுாலில் மத அவதுாறு; பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு

முகநுாலில் மத அவதுாறு; பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு

தொண்டி: முகநுாலில் மத அவதுாறு பதிவேற்றம் செய்த பா.ஜ., மாநில நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொண்டியை சேர்ந்தவர் அகமது பாய்ஸ் 47. இவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி 35. இவர் பா.ஜ., ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர் ஹிந்து, முஸ்லிம்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.அவர் மீது போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் குருஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்தது.குருஜி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி தொண்டி போலீசார் குருஜி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை