உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய கோரிக்கை

ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய கோரிக்கை

கடலாடி: கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இங்குள்ள பெருவாரியான கிராமங்களில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இவற்றில் முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்ய வேண்டும். பெரும்பாலான மேல்நிலைத் தொட்டிகள் ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் பாசி படர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை துாய்மைப்படுத்தி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும்.சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை