உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் ரத வீதியில் சாலை வசதி தேவை

கோயில் ரத வீதியில் சாலை வசதி தேவை

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை சிவன்கோயில் ரதவீதியில் சாலை வசதி செய்துதர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், யாத்திரியர்கள் வருகின்றனர். மங்களநாதர் சன்னதி ராஜகோபுரம் அருகே மங்களேஸ்வரி அம்மன் கோயில் ராஜகோபுரம் முன்பாக கிழக்கு ரத வீதி செல்கிறது.தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையில் செல்வோர் சிரமத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது.எனவே கிழக்கு ரத வீதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ