உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் பாதாள சாக்கடை குளம் போல் தேக்கம்: மக்கள் மறியல்

ரோட்டில் பாதாள சாக்கடை குளம் போல் தேக்கம்: மக்கள் மறியல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை நிறைந்து ரோட்டில் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேறி ரோடுகளில் குளம் போல் தேங்கி துர்நாற்றம், சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.இளங்கோவடிகள் தெருவில் பாதாள சாக்கடை நிறைந்து வெளியேறி குளம் போல் தேங்கியது. நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று மதியம் வண்டிக்கார தெருவில் நகராட்சி அலுவலகம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்வதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி