உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பெரியபட்டினம், : பெரியபட்டினத்தில் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா 123ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஜூன் 13 (வியாழக்கிழமை) மாலை 5:30 மணிக்கு நடக்க உள்ளது.முன்னதாக பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பச்சை பிறை வண்ண கொடிகள் மற்றும் தென்னம்பிள்ளை கொண்டு வரப்படும். மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின்னர் தர்கா வளாகம் அருகே உள்ள பெரிய கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஜூன் 23 மாலை முதல் அடுத்த நாள் வரை சந்தனக்கூடு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், தர்கா கமிட்டி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் செய்து வருகின்றனர். விழாவில் சுற்றுவட்டார நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்