உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மணல்  கடத்தல்; லாரி பறிமுதல் 

மணல்  கடத்தல்; லாரி பறிமுதல் 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்திய லாரியை தாசில்தார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் தாசில்தார் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் மணல் கடத்தல் தகவலின் பேரில் கேணிக்கரையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்திய லாரியை மறித்து சோதனை செய்தனர்.இதில் எந்த அனுமதியும் இன்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மணல் கடத்தல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ