உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் ஜெயில் கட்டுவதற்கு இடம் தேர்வு

திருவாடானையில் ஜெயில் கட்டுவதற்கு இடம் தேர்வு

திருவாடானை: திருவாடானையில் புதிய சிறைச்சாலை கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.திருவாடானையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறைச்சாலை இருந்தது. கட்டடம் மிகவும் சேதமடைந்ததால் 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் போன்ற போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் கைதிகள் ராமநாதபுரம் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர்.நீண்ட துாரம் கைதிகளை அழைத்து செல்வதால் போலீசார் சிரமம் அடைந்தனர்.இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிறை கட்டடம் கட்ட ரூ.2 கோடியே 28 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.ஆனால் போதிய இடம் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. நேற்று மாவட்ட நீதிபதி குமரகுரு, கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி. சந்தீஸ், மாவட்ட சிறை அலுவலர் தவமணி, திருவாடானை நீதிபதி பிரசாத், தாசில்தார் கார்த்திகேயன், டி.எஸ்.பி. நிரேஷ் மற்றும் அதிகாரிகள் கட்டடம் கட்டுவதற்கான இடங்களை ஆய்வு செய்தனர்.புதிய சிறைச்சாலை கட்ட 2 ஏக்கர் இடம் தேவைப்பட்டதால் பெரியகீரமங்கலம் ஊராட்சி சின்னக் கீரமங்கலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்