உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில்  ரம்புட்டான் கிலோ ரூ.300க்கு விற்பனை

ராமநாதபுரத்தில்  ரம்புட்டான் கிலோ ரூ.300க்கு விற்பனை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மருத்துவ குணம் மிக்க ரம்புட்டான் பழங்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது.மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வாங்கி வந்து ராமநாதபுரத்தில் விற்கின்றனர். அந்த வரிசையில் தற்போது கேரளா, ஊட்டி ஆகிய இடங்களில் இருந்து ரம்புட்டான் பழம் ராமநாதபுரத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்பழத்தின் உள்ளே நுங்கு போன்ற சதைப்பகுதி புளிப்பு கலந்த இனிப்பு சுவையாக இருக்கும். இப்பழங்கள் மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. மருத்துவ குணம் மிக்க பழம் என்பதால் மக்கள் விரும்பி வாங்குவதாக வியாபாரி ராஜேஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை