உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமூக நீதியை செயல்படுத்தியது வி.எச்.பி.,தான்!, ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

சமூக நீதியை செயல்படுத்தியது வி.எச்.பி.,தான்!, ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ராமேஸ்வரம் : கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், 54வது கிராமக் கோவில் பூஜாரிகள் ஆலய வழிபாட்டுப்பயிற்சி முகாம் தொடக்கவிழா, ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில், விசுவ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி தலைமையில் நேற்று நடந்தது.வி.எச்.பி., தமிழ்நாடு மாநில இணைப் பொதுச்செயலாளர் ராமசுப்பு வர வேற்றார். விழாவில், ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியது:தமிழகத்தில் 2 லட்சம் கோவில்கள் உள்ளன. பல கோவில்களில் பூஜாரி களுக்கு முறையான பயிற்சி இல்லை. ஏழு ஆண்டுகாலம் ஆகம பயிற்சி பெற்ற ஆச்சாரியர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவானது தான் இந்த பயிற்சி முகாம். இந்துக்களின் எல்லா வழிபாட்டு முறைகளையும் தி.மு.க.,வினர் கொச்சைப்படுத்தினார்கள்; இன்னமும் செய்கிறார்கள். எல்லாவற்றையும் ஒன்றாக்க வேண்டும் என சமூகநீதி பற்றி பேசுபவர்கள் எதுவும் செய்வது கிடையாது. அதை செயல்வடிவமாக செய்தது, வி.எச்.பி., மற்றும் கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவைதான். பயிற்சி முகாமின் இறுதி யில் யார் யாரெல்லாம் தீட்சை எடுத்துக்கொள்கிறார்களோ அவர் களுக்கெல்லாம் தீட்சைகொடுத்து, உபநயனம் எனப்படும் பூணுால் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிக மான பூஜாரி களுக்கு பூணுால் அணிவிக்கப்பட்டுள்ளது. நமது பாரததேசம் இந்துக்கள் அதிகமாக உள்ள நாடு. ஆனால் மதசார்பற்ற நாடு என கூறிவிட்டனர். கடந்த 2001ல் தொடங்கப்பட்ட நலவாரியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூஜாரிகள் உள்ளனர். மதமாற்றம் செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசி அவர்களை மீண்டும் தாய் மதத்திற்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ