உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் இருவருக்கு மாநில பசுமை முதன்மையாளர் விருது

ராமநாதபுரத்தில் இருவருக்கு மாநில பசுமை முதன்மையாளர் விருது

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன், சமூக ஆர்வலர் முகமது சலாவுதீனுக்கு தலா ரூ.ஒரு லட்சம் பரிசுத்தொகையுடன் தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனி நபர்கள், அமைப்புகளை தேர்வு செய்து பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படுகிறது.இதன்படி 2023 ம் ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருது மற்றும் தலா ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலை ராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் முகமது சலாவுதீன் பெற்றார். தனி நபர் பிரிவில் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசனுக்கு கிடைத்துள்ளது.இருவருக்கும் சான்றிதழ், காசோலையை கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் வழங்கி பாராட்டினார். மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளர் பகான் ஜெக்தீஷ் சுதாகர், சுற்றுச்சூழல் பொறியாளர் பத்மாஸனி உடனிருந்தனர். எஸ்.பி., சந்தீஷ் இருவரையும் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை