உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில்வே பீடர் ரோடு ஆக்கிரமிப்பால் அவதி

ரயில்வே பீடர் ரோடு ஆக்கிரமிப்பால் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள், தள்ளுவண்டி கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.ரயில்வே பீடர் ரோட்டில் நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கிருந்து தினமும் 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதன் காரணமாக ரயில்வே பீடர் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சிலர் ரோட்டை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிலர் டூவீலர்கள், கார்களை நிறுத்துகின்றனர்.இதனால் இப்பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் துவங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.எனவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள், கடைகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம், போலீசார் முன்வர வேண்டும் என மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை