உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சியில் வீடுகள்​ குறித்து ஆய்வு

ஊராட்சியில் வீடுகள்​ குறித்து ஆய்வு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்குவது குறித்து ஆய்வுப் பணி நடந்தது. ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். அப்போது வெங்கலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்கள் வசிக்கும் வீடுகள் குறித்து சர்வே செய்யப்பட்டது. அப்போது கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ