உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப்பள்ளியில் பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் வகுப்பறையில் மலஜலம் கழித்து அசுத்தம்

அரசுப்பள்ளியில் பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் வகுப்பறையில் மலஜலம் கழித்து அசுத்தம்

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறையை சேதப்படுத்தி மது அருந்தி பாட்டில்களை உடைத்தும் மல ஜலம் கழிது அசுத்தம் செய்தவர்கள் மீது புகார் அளிக்காததால் இரண்டாவது நாளாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.உப்பூர் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் படிக்கின்றனர். வார விடுமுறை முடிந்து ஜூலை 8 ல் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்ற போது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு மாணவர்கள் அமரும் சேர்கள் சேதப்படுத்தப்பட்டு பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளியில் இருந்த ஆவணங்கள், புத்தகங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மது பாட்டில்கள் வகுப்பறை முழுவதும் உடைக்கப்பட்டு மலஜலம் கழித்து அசுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த பெற்றோர் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்தி அசுத்தம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் செய்யாமல் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி நேற்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர். இதனால் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து வட்டார கல்வி அலுவலர் தமிழரசி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில் பள்ளியில் உள்ள 11 மாணவர்களில் 4 பேர் வழக்கம் போல் பள்ளிக்கு வருகின்றனர். ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 7 மாணவர்கள் மட்டுமே வரவில்லை. அவர்களின் பெற்றோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை