உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளம் பெண் மீட்கப்பட்டு   காப்பகத்தில் ஒப்படைப்பு

இளம் பெண் மீட்கப்பட்டு   காப்பகத்தில் ஒப்படைப்பு

ராமநாதபுரம் : -திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் 23 வயது இளம் பெண்.இவருக்கு ஆதரவற்ற நிலையில் அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.இதையடுத்து தாய் பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா மற்றும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் நிர்வாகி மோகனா, விசாரணை பணியாளர் சுஜிதா ஆகியோர் சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை