உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி- மதுரை ஏசி பஸ் நிறுத்தம்

தொண்டி- மதுரை ஏசி பஸ் நிறுத்தம்

திருவாடானை : தொண்டி-மதுரை அரசு ஏசி பஸ் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். தொண்டியிலிருந்து மதுரைக்கு காலை 9:45 மணிக்கு அரசு ஏசி பஸ் இயக்கப்பட்டது.திருவாடானை வழியாக செல்லும் இந்த பஸ் குறிப்பிட்ட சில பஸ் ஸ்டாப்புகளில் மட்டும் நின்று சென்றதால் இரண்டரை மணி நேரத்தில் மதுரை செல்ல ரூ.125 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.கோடை வெயில் அதிகமாக இருப்பதால் குளு, குளு வசதியுடன் செல்ல பயணிகள் விரும்பினர்.இதனால் அந்த பஸ்சில் கூட்டம் இருக்கும். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஏசி பஸ் இயக்கப்படவில்லை.போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், அடிக்கடி ரிப்பேர் ஆகியது. ஏசி வேலை செய்யவில்லை. மதுரை அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. ஆகவே ஏசி இல்லாமல் சாதாரண கட்டணத்தில் அந்த பஸ் இயக்கப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை