உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.ஊராட்சிஒன்றிய அலுவலக கட்டடம், ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் முட்செடிகள் ஆக்கிரமிப்பால் அப்பகுதி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாம்பு, உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருகின்றன.இதேபோன்று யூனியன்அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்திற்கு செல்லும் வழியிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு செல்லும் வழியிலும் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் அலுவலகத்திற்கு அருகே உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரித்தால் பசுமையாக மாறும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்