உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடையை மீறிய ராமேஸ்வரம் மீனவர்களுக்கு டோக்கன் ரத்து

தடையை மீறிய ராமேஸ்வரம் மீனவர்களுக்கு டோக்கன் ரத்து

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீண்டும் மீன் பிடிக்க மீன் துறை அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் வீடுகளில் முடங்கினர்.தடைக்காலம் முடிவதற்குள் ஜூன் 14ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு ஜூன் 16 காலை கரை திரும்பினார்கள். தடையை மீறி மீன்பிடிக்கச் சென்றதால் மீண்டும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன், மானிய டீசல் வழங்கப்படாது என மீன்துறையினர் தெரிவித்தனர்.அதன்படி நேற்று காலை மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்காமல் ரத்து செய்தனர். இதனால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 1200 படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறியதாவது:தற்போது 60 நாட்களுக்குப் பின் அதிக மீன்பிடிக்கும் ஆவலில் ராமேஸ்வரம் மட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பிற மாவட்ட மீனவர்களுக்கு இன்று (ஜூன் 17) மீன்பிடிக்க மீன்துறை டோக்கன் வழங்கியது.ஆனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்காமல் ரத்து செய்தது வேதனைக்குரியது. கடனில் சிக்கி தவிக்கும் மீனவர்களுக்கு மீன் வரத்தால் கடனை திருப்பி செலுத்த முடியும். இச்சூழலில் டோக்கன் வழங்காமல் மீண்டும் தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ